ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து வருடத்திற்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆதாருடன் சேர்க்கப்பட்ட மொபைல் எண் கையில் இருப்பது கட்டாயம் அவசியம். ஒருவேளை பயன்பாட்டில் அந்த செல்போன் எண் இல்லாவிட்டால் புதிய எண்ணை எளிதில் அப்டேட் செய்ய முடியும். இதற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையம், இ-சேவை மையத்துக்கு சென்று, விண்ணப்பதை பூர்த்தி செய்து, பயோ மெட்ரிக் பதிவிட்டால், புதிய எண் அப்டேட் ஆகிவிடும். இதற்கென்று தனி கட்டணம் வசூலிக்கப்படும். பயோமெட்ரிக் பதிவிடுவதால், எந்த ஆவணங்களும் தேவை இல்லை.