
ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதார் கார்டை பயன்படுத்த வேண்டும். வங்கிக்கணக்கு போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது . இதில் ஒரு சில நேரங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது அவசியமாகிறது.
அந்தவகையில் ஆதாரில் பிறந்த தேதியை திருத்தம் செய்ய விரும்பினால் பிறப்புச் சான்றிதழ், பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக்கில் ஏதேனும் ஒன்று வேண்டும். இதில் ஏதாவது ஒரு சான்று நகலுடன் ஆதார் ஆணையம், இ-சேவை மையம் சென்று, திருத்த விண்ணப்ப படிவத்தைப் பெற்று, பெயர், ஆதார் எண், சரியான பிறந்த தேதியை எழுதி, பயோமெட்ரிக் பதிவிட வேண்டும். இதன்பிறகு சில தினங்களிலேயே திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.