
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருமே வங்கி கணக்கு வைத்திருப்பது என்பது மிக அவசியம். இதன் மூலமாக எளிதாக பண பரிவர்த்தனை செய்துவிடலாம். சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு என பல்வேறு கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு நன்மைகள் பெற்று வருகிறார்கள். ஆனால் அதிகமானவர்கள் பயன்படுத்தும் கணக்கு சேமிப்பு கணக்கு தான். இந்த கணக்கில் அளவுக்கு அதிகமான பணத்தை போட முடியாது. அதற்கும் ஒரு வரம்பு உள்ளது. சேமிப்பு கணக்கில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
ஆனால் இந்த கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம் வருமான வரி வரம்பிற்குள் வந்தால் அது குறித்த தகவலை கொடுக்க வேண்டும். பொதுவாக அனைவரும் வருமானவரி துறையின் வரம்புக்குள் வருவதை தவிர்க்க விரும்புகிறார்கள். வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணம் வருமான வரி துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எனவே தேவையற்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக வழக்கமான வரம்பை அறிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு கணக்கில் பணத்தை சேமிக்கும் பொழுது இதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.