நியூசிலாந்தில் டனிடன் ஏர்போர்ட் அமைந்துள்ளது. இந்த ஏர்போர்ட்டில் தற்போது ஒரு வித்தியாசமான விளம்பர பலகையை பெரிதாக அடித்து மாட்டி விட்டுள்ளனர். அதாவது இனி 3 நிமிடத்திற்கு மேல் யாரும் கட்டிப்பிடிக்க கூடாது என்று விளம்பரம் செய்துள்ளனர். அதாவது விமான நிலையத்திற்கு பொதுவாக பயணிகளை டிராப் செய்ய வருபவர்கள் மரியாதை நிமித்தமாக அல்லது அன்பு செலுத்தும் விதமாக அவர்களை கட்டிப்பிடித்து வழி அனுப்புவது வழக்கம். பொதுவாக இது வெளிநாடுகளில் சகஜமாக நடைபெறும்.

ஒருவருக்கொருவர் கட்டிபிடிப்பது முத்தம் கொடுப்பது போன்றவைகள் அவர்கள் அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடாக பார்க்கிறார்கள். இந்நிலையில் ஏர்போர்ட்டில் பயணிகளை ட்ராப் செய்ய வரும் பயணிகள் நீண்ட நேரமாக அவர்களை வழியனுப்புவதற்காக கட்டுப்பிடித்துக் கொள்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் ட்ராபிக் ஜாம்ப் ஏற்படுவதால் பிற பயணிகளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக வழி அனுப்ப வரும் பயணிகள் யாரும் 3 நிமிடத்திற்கு மேல் கட்டிப்பிடிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவேளை பாசத்தை காட்ட வேண்டும் என்றால் அவர்கள் கார் பார்க்கிங்குக்கு சென்று கட்டிப்பிடித்து பாசத்தை காட்டிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.