
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆன்லைன் கடன் என்ற பெயரில் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகள் மற்றும் மோசடிகள் குறித்து மத்திய அரசை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. CashExpand- U என்ற பெயரில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலில் போலியானது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்கள் தொலைபேசியில் இருந்து உடனடியாக இந்த செயலியை டெலிட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.