
இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் ஒன்று தான் பூனை. இவ்வாறான செல்லப் பிராணிகள் தன்னுடைய உரிமையாளருக்கும் அவரின் குழந்தைகளுக்கும் இரண்டாவது தாயாக செயல்படுவதை பல காணொளிகளில் நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வீடியோவில் நபர் ஒருவர் வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றியுள்ளார்.
அப்போது காலை சுற்றி வந்த பூனை திடீரென கோபத்தின் உச்சத்திற்கு சென்று முதலாளியின் காலை கடிக்க வந்ததுடன் அவரை விரட்டி விரட்டி தாக்கவும் செய்துள்ளது. பூனையிடமிருந்து தப்பிப்பதற்கு உரிமையாளர் கடுமையாக போராடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் செல்லப் பிராணிகளை வைத்திருப்பவர்கள் இது போன்ற சம்பவம் நடக்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Cat owner suddenly gets attacked by his cat unprovoked and for no reason 😳 pic.twitter.com/bE4DhOIHol
— Crazy Clips (@crazyclipsonly) July 10, 2023