
தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனந்த பிரபுவின் குடும்ப நண்பர் அருண்யா(34). இவர் தனது நண்பரான சசிகுமார்(37) என்பவரை ஆனந்த பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அருண்யாவும், சசிகுமாரும் இணைந்து ஆனந்த பிரபுவிடம் 13 லட்சத்து 8 ஆயிரத்து 550 ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.
அதன் பிறகு ஒரு போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ஆனந்த பிரபுவை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஆனந்த பிரபு தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருண்யாவையும் சசிகுமாரையும் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.