
உங்களின் ஸ்மார்ட் போன் நீங்கள் பேசும் அனைத்தையும் ஒட்டிக் கேட்டுக் கொண்டு இருக்கிறது என்றால் அதை எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதாவது உங்கள் போனில் உள்ள siri, Google assistant, Cortana போன்ற வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் செயலிகளால் தான் இது நிகழ்கிறது. இது செயலிகள் வேக் வார்ட்ஸ் எனப்படும் சில வார்த்தைகளுக்கு பதில் அளிக்கும். இவை எப்போதும் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் போனில் உள்ள மைக்ரோபோனின் உதவியுடன் கேட்டுக் கொண்டு இருக்கின்றது.
அதனைப் போலவே வேறு சில செயல்களும் உதாரணமாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதிகளை உள்ளடக்கிய பேஸ்புக், whatsapp மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளும் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பதை எப்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். நீங்கள் எந்த ஒரு செயலியை இன்ஸ்டால் செய்யும்போதும் தேவையில்லாத செயல்களுக்கு மைக்ரோஃபோன் அணுக்கள் அனுமதியை வழங்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் இந்த செயல்களுக்கு அணுக்கள் அனுமதி கொடுத்து இருந்தால் மொபைல் செட்டிங் சென்று அந்த அனுமதியை நீங்கள் நீக்கி விடலாம்.
ஆண்ட்ராய்டு பயனர்கள்
விர்ச்சுவல் அசிஸ்டென்ட் :
Settings -> Apps -> General -> Assistant -> See all Assistant Settings -> Turn Off “Hey Google”
பிற செயலிகளுக்கு:
Settings -> Apps -> permission ->microphone -> select the app -> turn off the microphone
ஐபோன் பயனர்கள்:
விர்ச்சுவல் அசிஸ்டென்ட் :
Settings -> Siri & Search -> Turn Off “Listen for Hey Siri”
பிற செயலிகளுக்கு:
Settings -> Privacy & Security ->microphone -> select the app -> turn off the microphone