
இந்தியாவில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் மற்றும் பான் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தை கொண்டு மோசடி செய்யும் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டுகளை அதிக அளவு குறி வைக்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பான் கார்டு தொலைந்து விட்டால் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். இல்லையென்றால் நம்முடைய பான் கார்டு வைத்து மோசடி கும்பல்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடுவார்கள். பான் கார்டு தொலைந்து விட்டால் டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
அதற்கு முதலில் TIN – NSDL போர்ட்டலின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று change or correction in PAN card/ reprint of PAN card in existing pan data என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு டோக்கன் நம்பர் அனுப்பப்படும். அந்த நம்பரை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பிறகு நிச்சயம் உங்களுக்கு இது தேவைப்படும்.
உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்யப்பட்டு அதனை சரியாக இதில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவை அனைத்தையும் முடித்த பிறகு இரண்டு வாரங்களில் உங்களுக்கு பான் கார்டு வீடு தேடி வரும்.
இதனை செய்ய நீங்கள் சிரமப்பட்டால் அருகில் உள்ள கணினி மையத்திற்கு சென்று இதனை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.