காசாவில் தொடரும் போரின் அச்சத்தில் வாழும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து பீதியுடன் வாழ்ந்துவருகின்றனர். சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோ நெஞ்சை உலுக்குகிறது. அந்த வீடியோவில், காயமடைந்த தனது தங்கையை சிறுமி தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சி காண்போர் மனதை பதற வைக்கிறது.

அந்த சிறுமியை கேட்டபோது, தங்கையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுகிறேன் என்று கூறியுள்ளார். “என்னால் நடக்க முடியவில்லை,” என்று அந்த சிறுமி வீகூறுகிறார். உடனே  வீடியோ எடுத்த நபர் இருவரையும் காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அந்த பயணத்தின் போது, தன் தங்கையை மிகவும் காதலிப்பதாக சிறுமி தலையசைத்தபடி பதில் அளிக்கிறது. அந்த வீடியோ பார்ப்போரின் நெஞ்சை உலுக்குகிறது.