
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நந்தீஸ் என்ற கணவரும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் வித்யா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். இதன் காரணமாக வித்யாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வித்யா தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்குப் பிறகு அவருடைய கணவர் நந்தீஸ் தலைமறை வாகிவிட்டார். மேலும் இதனால் தகறாறில் தன்னுடைய மனைவியை நந்தீஸ் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.