சீனாவில் ஹெய்பெய் மாகாணத்தில் வாங் என்ற மாணவன் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த மாணவரை சாங், லீ, மா என்ற மூன்று 13 வயது சிறுவர்கள் தனியாக தோட்டத்திற்கு அழைத்துச் சென்று மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் வாங்கின் சடலத்தை அங்கேயே புதைத்து விட்டு அந்த சிறுவனின் செல்போனில் இருந்து தங்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மூன்று சிறுவர்களையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது பணத்திற்காக திட்டமிட்டு சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் குற்றவாளியான சாங் என்ற சிறுவனுக்கு ஆயுள் தண்டனையும், லீ என்ற சிறுவனுக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளியான மா என்ற சிறுவனை சீர்திருத்த பள்ளியில் நடக்க நீதிபதி உத்தரவிட்டார்.