ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி சீனிவாசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் வயல்வெளியில் மறைந்திருந்து சீனிவாசனை ஓட ஓட விரட்டி வெட்டி உள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க சீனிவாசன் முயற்சி செய்துள்ளார். ஆனாலும் அவர்கள் சீனிவாசனை ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அறிந்த டிஎஸ்பி ஜாபர் சித்திக் சம்பவம் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.