உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் மே 14-ம் தேதி பதவியேற்கிறார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பி.ஆர்.கவாய் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.

இவர் கடந்த 1960 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி நகரில் பிறந்தார். இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவருடைய குடும்பத்தினர் அம்பேத்கர் கொள்கையால் கவரப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள். மேலும் இவர் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.