இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பின் எண் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. பல எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் மற்றும் ஏடிஎம்களுக்கு பின் நம்பர் ஒரு பாதுகாப்பு கவசத்தை அளிக்கிறது. சிலர் இது பற்றி அலட்சியமாக உள்ளனர். 1234, 0000 போன்ற பலவீனமான பின் நம்பர்கள், பிறந்தநாள் அல்லது தொலைபேசி எண் போன்ற தனிப்பட்ட தகவலின் அடிப்படையில் பின் நம்பரை அமைக்கின்றனர்.

இது போன்ற பின் நம்பர்களால் இணைய மோசடிகள் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஹேக்கர்கள் அதனை மிக எளிதாக திறக்க முடியும். எனவே மிக கடினமான பின் நம்பர்களை செட் செய்து கொள்வது அவசியம்.