
தமிழகத்தில் எங்கேயாவது மின் திருட்டு நடப்பது குறித்து தகவல் தெரிந்தால் உடனே கைபேசியை எடுத்து உங்கள் விவரங்களை தெரிவிக்காமல் மின் திருட்டு இடம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை CCMS செயலியில் பகிரலாம் என்று மின்வாரியம் பொது மக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மின் திருட்டு நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து உள்ள நிலையில் மின் திருட்டை தடுத்தால் கூடுதல் மின் தேவை சுமை குறையும், தரமான மின்சாரம் வழங்க உதவும், பொருளாதாரம் மேம்படும், உயிர்களைக் காக்கும் மற்றும் சமூக மேம்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே மின் திருட்டு குறித்து உங்களுக்கு தகவல் தெரிந்தால் உடனே மின்வாரியத்தில் புகார் அளிக்கலாம்