உலகில் உள்ள அனைவருக்குமே தண்ணீர் என்பது அத்தியாவசிய தேவையாகும். அதிலும் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீரை விட வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • வெந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதுடன் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
  • வெந்நீர் குடிப்பது உடல் சோர்வை நீக்கி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
  • சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் உணவு விரைவில் செரிமானம் ஆகும்.
  • தூங்கி எழுந்ததும் இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பது மலச்சிக்கலை தடுக்கும்.
  • எண்ணெயில் செய்த உணவுகள் அல்லது காரசாரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் தேவையற்ற கொழுப்பு உடலில் சேராது.
  • வெண்ணீர் குடிப்பதால் முகப்பொலிவு அதிகரிக்கும்.