
இந்தியாவில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்புத்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கான புதிய விதியை FSSAI வெளியிட்டுள்ளது.
அதன்படி சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளின் மேற்புறத்தில் கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பின் அளவு உள்ளிட்ட தகவல்களை பெரிய எழுத்தில் பொறிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைப் போலவே இணைய முறை வணிகத்தில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்கும் நிறுவனங்களும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.