ஒரு சில நேரங்களில் அடுத்தவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில் குரோஷியாவில் பிரானோ செலக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு முறை விமானத்தில் பயணித்தார். அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக பிரானோ செலக் உயிர் தப்பினார். அதன்பிறகு பிரானோ செலக் ரயிலில் பயணித்தபோது மழையால் அந்த ரயில் தடம் புரண்டது.

அப்போதும் உயிர் தப்பிவிட்டார். ஒருமுறை பிரானோ செலக் குன்றின் உச்சியில் இருந்து கீழே விழுந்தார். அப்போதும் அவரது உயிருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த 2003-ஆம் ஆண்டு பிரானோ லாட்டரி வாங்கினார். அதில் அவருக்கு எட்டு கோடி ரூபாய் பரிசும் கிடைத்தது. இதுகுறித்து அறிந்த நெட்டிசன்கள் உண்மையிலேயே உலகின் லக்கி பாஸ்கர் இவர்தான் என ஆச்சரியத்தில் உள்ளனர்.