
கூகுள் குட்டப்பா, கவுரவம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை பவித்ரா லோகேஷ் 2வது திருமணம் செய்ய இருக்கிறார். அவர் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ்(60) என்பவரை காதலித்து வந்தார். இதில் நரேஷ் ரெண்டு ஜல சீதா, ஸ்ரீவாரிக்கி பிரேமலேகா உட்பட 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிப்பு மட்டுமின்றி அரசியல் மற்றும் சமூக சேவைகளில் நரேஷ் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் நரேஷுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார். இதில் நரேஷ் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தவர், பவித்ரா விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.