எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பது விமர்சித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதிலடி  கொடுக்கும் விதமாக மக்களுக்காக நல்லது செய்த கலைஞர் கருணாநிதி பெயரை திட்டங்களுக்கு வைக்காமல் ‌ பதவிக்காக கரப்பான் பூச்சியை போன்று ஊர்ந்து சென்றவரின் பெயரையா வைக்க  முடியும் என்று விமர்சித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி கலைஞர் கருணாநிதி பெயர் வைப்பதற்கு விமர்சனம் தெரிவித்த நிலையில் அப்பா புள்ளையை புகழ்ந்து பேசுவதாகவும் பையன் அப்பாவை புகழ்ந்து பேசுவதாகவும் விமர்சித்தார். அதோடு உதயநிதி ஸ்டாலினை விஷ காளான் என்றும் கூறினார்.

இதற்கு துணை முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி நன்றி கெட்டவர் என்றும், பதவிக்காக ஊர்ந்து சென்ற கரப்பான் பூச்சி மற்றும் விஷஜந்து என்றும் அவருக்கு என்னை போன்றவர்கள் விஷ காளான்கள் தான் என்று கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை கரப்பான் பூச்சி என்ற உதயநிதி ஸ்டாலின் விமர்சித்ததற்கு அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, உதயநிதி ஸ்டாலினுக்கு கரப்பான் பூச்சியை கண்டு பயம். அதனால் தூங்கும் போதும் எதைப் பார்த்தாலும் அவருக்கு கரப்பான் பூச்சியை பார்ப்பது போன்றே தோன்றும். மேலும் யார் கரப்பான் பூச்சி என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டை யார் வழிநடத்த போகிறார்கள் என்றும் அப்போது தெரிந்துவிடும் என்று கூறினார்.