லேப்டாப் வாங்கி தர உதவி கேட்ட பெண்ணுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக பண உதவி செய்தார். திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதிக்கு வந்த அவர் அங்குள்ள கடையில் அமர்ந்து நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவி ஒருவர் லேப்டாப் வாங்க உதவி செய்ய வேண்டும் என அவரிடம் மனு அளித்தார். உடனடியாக அந்த பெண்ணிடம் பேசிய அமைச்சர் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரிடம் வழங்கினார். அமைச்சரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.