சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் காவலாளியாக பணியாற்றி வரும் ரங்கநாதன், வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இருவரும் ஏடிஎம் வாசலில் தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்றனர். அப்போது வங்கி முன்பகுதியில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை என காவலாளர் ரங்கநாதன் கூறியுள்ளார். அதற்கு  “உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என கூறிய அந்த நபர்கள், ஏடிஎம்-ல் நுழைந்து பணம் எடுக்க சென்றனர்.

இதனையடுத்து இருவரும் ரங்கநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கொலைவெறியுடன் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரங்கநாதனை தாக்கிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.