கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கொடுக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன்னுடன் படிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வெங்கடேசன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி விருதாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் அடிப்படையில்  வெங்கடேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.