உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சௌரப் ராஜ்புத் என்பவரை அவருடைய மனைவி முஸ்கான் மற்றும் காதலன் சாகல் ஆகியோர் கொலை செய்து நீல நீற டிரம்பில் உடலை 15 துண்டுகளாக வெட்டி சிமெண்ட் போட்டு பூசினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், முஸ்கான் மற்றும் அவருடைய காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாயா மவுரியா என்ற பெண் தன் கணவனை முஸ்கான் போன்றே நீல நிறம்பில் உடலை துண்டு துண்டாக வெட்டி வைத்து விடுவேன் என்று மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தர்மேந்திர குஷ்வாகா என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு தர்மேந்திர தனது மனைவி மாயா பெயரில் நிலம் மற்றும் கார்கள் போன்றவற்றை வாங்கிய நிலையில் பின்னர் ஒரு வீடு கட்டுவதற்காக அதற்கான கட்டிட ஒப்பந்தத்தை தன்னுடைய உறவினரான நீரஜ் மவுரியா என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். அப்போதுதான் நீரஜூடன் மாயாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா காலகட்டத்தின் போது நீரஜ் மனைவி உயிரிழந்ததால் மாயா மற்றும் நீரஜ் உறவு மேலும் வலுவானது.

 

 

இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாயாவின் கணவர் காவல் நிலையத்தில் இது பற்றி ஒரு புகார் கொடுத்தார். அதாவது மாயா நீரஜூடன் சென்ற நிலையில் தன்னை தாக்கியதோடு மட்டுமின்றி வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகள் போன்றவற்றை கட்டாயமாக எடுத்துச் சென்றதாக அவர் குற்றசாட்டு தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடு ரோட்டில் வைத்து மாயா தற்போது தன் கணவரை மிரட்டி தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.