தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது அஜித் நடிப்பில் ரிலீசான குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் சிம்ரன் நடித்துள்ளார்.

சிம்ரனின் தங்கை மோனல் பார்வை ஒன்றே போதுமே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு மோனல் பத்ரி, சமுத்திரம், இஷ்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 2002-ஆம் ஆண்டு மோனல் தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் மோனலின் 23-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அப்போது சிம்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் 23 வருடங்களில் ஒரு நாள் கூட உன்னை நாங்கள் நினைக்காமல் இருந்ததில்லை மோனல். நீ மறைந்து இருக்கலாம். ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சிம்ரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.