தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அழகுராஜா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (25) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இவர் தங்களுடைய குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜோசியர் ஒருவரை நாடி பரிகாரம் செய்வது குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் அழகுராஜா வயது குறைந்த ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ராமலட்சுமி நம்பிய நிலையில் தன்னுடைய கணவருக்கு ஒரு சிறிய வயது பெண்ணை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக தங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் ஒருவரது 14 வயது மகளை பயன்படுத்த நினைத்தார். அதன்படி சிறுமியை தன் வீட்டிற்கு வரவழைத்த ராமலட்சுமி அவரையும் தன் கணவரையும் ஒரே அறையில் வைத்து பூட்டினார்.

பின்னர் அழகுராஜா அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். ஒரு நாள் முழுவதும் தன் வீட்டில் ராமலட்சுமி சிறுமியை அடைத்து வைத்திருந்த நிலையில் பின்னர் மறுநாள் எதுவும் நடக்காதது போன்று சிறுமியை அவருடைய வீட்டில் சென்று விட்டு விட்டார். இது தொடர்பாக சிறுமி தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அழகுராஜா மற்றும் ராமலட்சுமியை கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 20 வருடங்கள் சிறை சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு 19 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.