திருச்சி மாவட்டம் மேல கல்கண்டார் கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(29) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தார். இதனால் ரவிச்சந்திரன் அவரது மனைவியும் கோபாலகிருஷ்ணனை கண்டித்ததாக தெரிகிறது.

பெற்றோர் திட்டியதால் மன உளைச்சலில் இருந்த கோபாலகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.