பெற்றோர்கள் தங்கள் மகள் உயிருடன் இருந்தபோது அவளுக்கு இறுதி சடங்குகள் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கேரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அனாமிகா துபே (வயது 25) என்ற இளம்பெண் ஒருவர் ஜூன் 7 ஆம் தேதி காதலனுடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெற்றோரை மிகவும் வேதனைப்படுத்தியது. இதனையடுத்து உயிரோடு இருக்கும் மகளுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ஜூன் 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மகளின் இறுதி சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.