உகாண்டா நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரபாகா சப்தகி பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு 48-வது இடத்தை பிடித்தார். அவர் கடந்த மாத இறுதியில் ஊருக்கு திரும்பிய நிலையில் அவருடைய காதலனான டிக்சன் டைமா மென்கிச் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தவறான ஏற்பட்டுள்ளது. அதாவது சமீபகாலமாகவே இருவருக்கும் ஒரு நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.

கடந்த 1-ம் தேதி ரபாகாவை அவருடைய காதலன் உயிரோடு தீ வைத்து கொளுத்திய நிலையில் அவர் மீதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ரபாகா கடந்த 4-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய காதலனும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் காதலன் தீவைத்துக் கொளுத்தியதில் ஒலிம்பிக் வீராங்கனை உயிரிழந்த நிலையில் அவருடைய காதலனும் தற்போது இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.