தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்ட முகாம் பணி கட்டாயம் இல்லை என்ற தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு பணியில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்த விவரங்கள் மாநில அலுவலகத்தில் இருந்து விரைவில் மாவட்டங்களுக்கு பகிரப்படும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களை கொண்டு தன்னார்வலர்களுக்கு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் அளிக்க வேண்டாம்.
நகரப் பகுதியில் போதிய இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் இல்லை. அதுபோன்ற இடங்களில் சுய உதவிக் குழு உறுப்பினர்களை அடையாளம் கண்டு நியமிக்கலாம். 20% தன்னார்வலர்களை அடையாளம் கண்டு இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு உதவி மைய தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம். என்னப்பா பதிவு பணிக்கு தேவைப்படும்போது அவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.