
இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அதை அங்கீகரிக்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களான அனன்யா கோடியா மற்றும் உத்கர்ஷ் கச்சேனா ஆகியோர் நீதிமன்றம் முன்பே மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. “எங்கள் உரிமை மறுக்கப்பட்ட இடத்தில், நாங்கள் மோதிரம் மாற்றிக்கொண்டோம். அதனால், இந்த வாரம் சட்ட இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிச்சயதார்த்தமும் நடந்த வாரம்” என்று அனன்யா கோடியா பதிவிட்டுள்ளார்.