
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் நகரில் வசித்து வரும் பிரியங்கா நிஷாத் என்பவருடைய உறவினர் பிரிஜேந்திர நிஷாத். பிரியங்காவுக்கு அவருடைய மருமகன் உறவு முறை கொண்ட பிரிஜேந்திரா உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பிரியங்காவுக்கு சிந்து குமார் என்ற முன்னாள் காதலர் ஒருவரும் இருந்துள்ளார். இவர்கள் இருவர் இடையேயான தொடர்பை அறிந்ததும் அவர் கோபப்பட்டு தனியாக இருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவேன் என்று கூறி பிரியங்காவை மிரட்டி தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளார்.
இதனால் சிந்து கள்ளக்காதலுக்கு தடையாக இருப்பவர் என உணர்ந்த பிரியங்கா சென்னையில் இருந்து சிந்துவை சில நாட்களுக்கு முன்பே ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். இதனை நம்பி பெங்களூருக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு அவரும் காதலியை பார்க்க கோரக்பூர் சென்றுள்ளார். பிறகு பிரிஜேந்திரா, ஆகாஷ் குமார் மற்றும் சிவகுமார் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்கா அவரை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். இதில் சிந்து உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை குளத்தில் வீசி சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரியங்கா உட்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.