
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருப்பதாவது, பிரிக்ஸ் கூட்டமைப்பு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. புதிதாக எந்த நாணயத்தையும் பிரிக்ஸ் நாடுகள் உருவாக்கக் கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது. அமெரிக்கா டாலரை மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் 100% சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும். தங்களது பொருட்களை அவர்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யவும் முடியாது. பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எந்த நாணயத்தையும் உபயோகப்படுத்த கூடாது.
டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் இருக்கும் உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் எச்சரித்துள்ளார். இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, நாடுகளை உடைய வலுவான கூட்டமைப்பு பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நடத்தப்படும். கடந்த ஆண்டு புதிதாக ஆறு நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஈரான், அர்ஜென்டினா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளை சேர்த்துக் கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.