பொதுவாக பேருந்து சேவையில் ஒரு ஓட்டுநர், ஒரு நடத்துநர் இருப்பது வழக்கம். ஆனால் ஓட்டுநர் இல்லாமல் பேருந்து இயங்கினால் எப்படி இருக்கும்.? ஆச்சரியமாக உள்ளதா? ஆம் உலகிலேயே முதன்முறையாக ஸ்காட்லாந்தில் ஓட்டுநர் இல்லாத பயணிகள் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. முழுமையான தானியங்கி பேருந்துகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படாத நிலையில் ஒவ்வொரு பேருந்திலும் பாதுகாப்பு ஓட்டுநர் என ஒருவர் பணியமர்த்தப்பட உள்ளார்.

மேலும் பேருந்தை சுற்றி சென்சார்கள் பொருத்தப்பட்டு மணிக்கு 50 மைல் வேகத்தில் செல்லக்கூடிய அளவில் இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. உலகிலேயே ஓட்டுனர் இல்லாமல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது இதுதான் முதல் முறை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.