உலகின் நீளமான நெடுஞ்சாலை சவுதி அரேபியாவில் உள்ளது. இந்த சாலை 256 கிலோ மீட்டர் நீளத்தில் இருக்கும் நிலையில் எங்குமே வளைவுகள் என்பதே கிடையாது. இதனால்தான் உலகின் நேரான மற்றும் நீளமான நெடுஞ்சாலை என்ற பெருமையை பெற்றுள்ளது. அதோடு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இந்த சாலை சவுதி அரேபியாவில் உள்ள ஹராத் முதல் அல்பத்தா வரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை ரப் அல் காலி பாலைவனத்தின் நடுவே உள்ளது. மேலும் இந்த சாலையை வெறும் 2 மணி நேரத்தில் கடக்கலாம் என்றாலும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.