
ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் ஒருவரின் சராசரி வருமானம் ஆகியவற்றை பொறுத்துதான் அந்த நாடு வளந்த நாடா அல்லது வளர்ந்து வரும் நாடா என்பது நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நிலையான பொருளாதாரம் மற்றும் ஒருவரின் சராசரி வருமானம் போன்றவற்றை கணக்கிட்டு உலகின் பணக்கார நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் அயர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து லக்சம்பர்க் இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் 3-ம் இடத்திலும் உள்ளது. அதன் பிறகு பணக்கார நாடுகள் பட்டியலில் கத்தார் 4-ம் இடத்திலும், மக்கோவா நாடு 5-ம் இடத்திலும் இருக்கிறது. மேலும் ஆடம்பர கட்டிடங்கள் நிறைந்துள்ள அரபு நாடுகள் 6-ம் இடத்திலும், சுவிஸ்லாந்து 7-ம் இடத்திலும், நோர்வே 8-ம் இடத்திலும், அமெரிக்கா 9-ம் இடத்திலும், சாம் மாரினோ 10-ம் இடத்திலும் இருக்கிறது. ஆனால் இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறவில்லை. இருப்பினும் தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது வேகமாக வளர்ந்து வருவதால் இன்னும் சில வருடங்களில் இந்தியாவின் பெயர் இடம் பிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.