உலகில் பல நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது. அந்த வகையில் குறைந்த மக்கள்தொகை கொண்ட உலகின் 7 நாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி உலகின் மிகச் சிறிய நகரமாக குரோட்டியா நாட்டில் உள்ள ‘ஹம்’ நகரம் உள்ளது. இது மிகப் பழமையான ஒரு நகரமாகும். இங்கு வெறும் 30 மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இருப்பினும் இந்த நகரத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனையடுத்து உலகின் இரண்டாவது சிறிய நகரமாக ஆடம்ஸ்டவுன் உள்ளது. இது பிட்காயின் தீவுகளின் தலைநகரமாகும். இங்கு வெறும் 50 மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து பலாவ்வின் தலைநகரமான கெருமுல்ட் நகரத்தில் வெறும் 200 மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள்.

அதன்பிறகு பிரம்மாண்டமான வாடிகன் சிட்டியில் சுமார் 1000 பேரும், கனடா நாட்டில் உள்ள கிரீன்வுட் நகரத்தில் 1000-க்கும் குறைவான மக்களும் இருக்கிறார்கள். கிரீன்வுட் நகரம் உலகில் உள்ள இரண்டு சுரங்க நகரங்களில் ஒன்றாகும். பிரிட்டனில் உள்ள மிகச் சிறிய நகரமான செயிண்ட் டேவிட்டில் மிகக் குறைவான மக்களே வசித்து வருகிறார்கள். இங்கு 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கதீட்ரல் ஒன்று அமைந்துள்ளது. அதோடு குறுகிய  வீதிகளை கொண்ட இந்த நகரத்தில் ஏராளமான கலைக்கூடங்கள், ஹோட்டல்கள் போன்றவைகளும் உள்ளது. மேலும் பெர்முடாவின் தலைநகரமாக இருக்கும் ஹாமில்டன் ஒரு மிகச் சிறிய நகரமாகும். இங்கு ஆயிரத்துக்கும் குறைவான மக்களே வசிக்கும் நிலையில் கதீட்ரல் மற்றும் துறைமுகங்கள் பல இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.