
உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, கவுதம் அதானி, பில்கேட்ஸ் போன்ற ஆண்கள் தான் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். தற்பொழுது இந்த பட்டியலில் பெண்களின் பெயர் பெரும்பாலும் இல்லை. என்றாலும் ஒரு காலத்தில் அதில் ஒரு பெண் இருந்தார். உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்மணி என்று அறியப்படும் ஒரு பெண் இருந்தார் . கௌதம் அதானி போன்ற பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் அதைவிட அதிகமான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருந்தார்.
மொத்தம் 16 ட்ரில்லியன் டாலர் சொத்துகளுக்கு சொந்தக்காரரான வு ஜெடியன் என்பவரை மக்கள் அனைவரும் அவரை பேரரசி வூ என்று அழைப்பார்கள். இவர் அந்த காலத்தின் மிகவும் பணக்கார பெண்மணி .இன்றைய கோடீஸ்வரர்களுடைய செல்வத்தை ஒருங்கிணைத்தாலும் இவர் முன் தோற்றுப் போவார்கள். அவர் சீனாவின் புத்திசாலி பேரரசர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.