
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PsL) தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் சாம் பிலிங்ஸ், IPL மற்றும் PSL-ஐ ஒப்பிட்டு கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு கடுமையாக பதிலளித்தார். “நீங்க என்னை ஏதாவது பைத்தியம் மாதிரி பேச சொல்ல வர்றீங்க போல இருக்கு. உலகிலேயே IPL தான் நம்பர் 1 லீக். இதுக்கு பிறகு தான் மற்ற எல்லாமே,” என அவர் பதிலளித்தார். இங்கிலாந்திலும், பிக்பாஷ் லீக்கிலும், PSL போன்று உலகின் இரண்டாவது சிறந்த T20 லீக் உருவாக்க முயற்சி நடக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து IPL-ஐ வைத்து சலசலப்பான கேள்விகளை கேட்பது தற்போது வழக்கமாகியுள்ளது. சமீபத்தில், IPL ஏலத்தில் விற்கப்படாததால் PSL-ல் விளையாட வந்த டேவிட் வார்னரிடம், இந்திய ரசிகர்கள் அவரை வெறுப்பதாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், வார்னர் அதனை முற்றிலும் மறுத்தார். “இந்தக் குற்றச்சாட்டை நான் இப்போதுதான் கேட்கிறேன். நான் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். இப்போ எனக்கு PSL-ல் வாய்ப்பு கிடைச்சிருக்கு. நான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கராச்சி கிங்ஸுக்கு கேப்டன் ஆகி டிராபி வெல்லப்போறேன்” என அவர் தெரிவித்தார்.
IPL குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்த கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. IPL-ஐ தாண்ட எந்த T20 லீக்கும் இல்லை என சாம் பிலிங்ஸ் திட்டவட்டமாக கூறியது, பலரிடையே திருப்தியையும், சிலரிடையே எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.