இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது சாகசங்களை யூடியூப் போன்ற இணையதளங்களில் சேனல்கள் உருவாக்கி வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் ஸ்ட்ரீமர் என்ற வாலிபர் ‘ஐ ஷோ ஸ்பீடு’ என்ற பெயரில் யூடியூபில் பிரபலமானார். 19 வயதான இந்த வாலிபர் தன்னுடைய சேனலில் பலவிதமான சவால்கள் செய்து அதை வீடியோவாக யூடியூபில் பதிவிட்டு வருகிறார்.

இவருக்கு லட்ச கணக்கில் ஃபாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அவர் செய்த ஒரு சாகசம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ட்மரின் தந்தை ஒரு சொகுசு காரை வேகமாக ஓட்டி வரும் நிலையில் ஸ்ட்ரிமர் அதை தாவி குதித்து அசால்ட்டாக நிற்கிறார். அதோடு “உலகிலேயே இந்த சாகசத்தை செய்த முதல் நபர் நான் தான்” லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க” என்று தனது தந்தையுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் பதிவிட்டார். மேலும் பதிவு செய்த இரண்டு நாட்களில் பெரிய அளவில் வைரலான இந்த வீடியோவிற்கு 4 கோடி பேர் லைக் செய்துள்ளனர்.