உலகிலேயே முதல்முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்து பின்லாந்து அரசு அசத்தியுள்ளது. விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை டிஜிட்டல் பாஸ்போர்ட் குறைத்துள்ளதாகவும் பயணிகள் மிக எளிமையாக பயணம் செய்ய முடியும் என்றும் பின்லாந்து அரசு கூறியுள்ளது. மேலும் சில நகரங்களில் மட்டும் தற்போது டிஜிட்டல் பாஸ்போர்ட் சோதனை முயற்சியாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.