இபிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியானது. அதில் இந்தியா பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் தான் உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி ஆகிறது. மேலும் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தபடியாக நைஜீரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த வகையில் நைஜீரியாவில் 35 லட்சம் இந்தோனேஷியாவில் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா நான்காவது இடத்தில் உள்ளது. முன்னதாக சீனா தான் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்தது. ஆனால் அங்கு கழிவு மேலாண்மை சிறப்பாக செயல்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து சீனா தனது தரத்தை முன்னேற்றியுள்ளது.