உலக அளவில் மக்கள் சைவ மற்றும் அசைவ உணவுகளை மாறி மாறி விரும்பி சாப்பிடுகிறார்கள். இருப்பினும் சைவ உணவுகளை விட அசைவ உணவுகளின் மீது மக்களுக்கு அதிக விருப்பம் இருக்கிறது.இந்நிலையில் உலக அளவில் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்தப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு 88% மக்கள் அசைவ உணவை சாப்பிடுகின்றனர்.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மக்கள் 87% பேர்  அசைவ உணவை உண்கின்றனர். மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினா இடம்பெற்றுள்ளது. இங்கு 86% பேர் காரமான அசைவ உணவுகளை விரும்புகின்றனர். நான்காவது இடத்தில் பிரேசில் இடம்பெற்றுள்ளது. இங்கு 85% பேர் அசைவ உணவை தினசரி உணவாக சாப்பிடுகின்றனர். ஐந்தாவது இடத்தில் கனடா இடம்பெற்றுள்ளது. இங்கு 84% பேர் அசைவ உணவுகளை உட்கொள்கின்றனர். ஆறாவது இடத்தில் பிரான்ஸ் இடம்பெற்றுள்ளது. இங்கு 82% மக்கள் அசைவ உணவுகளை உட்கொள்கின்றனர். ஏழாவது இடத்தில் தென் கொரியா இடம்பெற்றுள்ளது. இங்குள்ள மக்கள் 80% சதவீதம் பேர் அசைவ உணவு சாப்பிடுகின்றனர்.