உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் கோப்பை தொடர் 2024 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் இப்போட்டி  பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியால் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்திருந்தார். இதனால் இந்த போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. மேலும் உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதல் இடத்தில் இருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும், இந்தியா 3-ம் இடத்திலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.