கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி பகுதியில் ரங்கசாமி (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு  வேலை பார்த்துக் கொண்டிருந்த 47 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து  உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதை ரங்கசாமி தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்த நிலையில் அதை அடிக்கடி காண்பித்து தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி பெண்ணை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த ரங்கசாமி மீண்டும் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்த கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.