
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரனாமூரை சேர்ந்த காமராஜ் என்பவருடைய மகன் சுகுமார் (28). இவருக்கும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அத்தியூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி மகள் திவ்யா (20) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சுகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் புது வாழ்க்கையில் பல கனவுகளுடன் இருந்த புது பெண் திவ்யாவுக்கு இது இடியாய் அமைந்தது. மனக்கவலையுடன் இருந்தது திவ்யா தனது கணவருக்கு அடிக்கடி அறிவுரை வழங்கிய நிலையில் சுகுமார் அதனை கேட்கவில்லை.
தினமும் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுகுமார் வழக்கம் போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நிலையில் மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். ஆனால் மது போதையில் இருந்ததால் திவ்யா அதற்கு மறுப்பு தெரிவித்து அவரை தன் அருகில் நெருங்க விடாமல் தள்ளிவிட்டு உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் அருகில் இருந்த இருப்பு கம்பியால் திவ்யாவின் தலையில் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த திவ்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே அங்கிருந்து சுகுமார் தப்பி ஓடிய நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , வழக்கு பதிவு செய்த போலீசார் சுகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.