
சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாக்கியம்(51)- பழனிசாமி(54) தம்பதியினர். பழனிசாமி பாக்கியத்தின் இரண்டாவது கணவர். இருவரும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தனர்.
கதிரேசன்(38)என்பவர் மேட்டூர் தொழில் பேட்டையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது பாக்கியமும், பழனிசாமியும் கதிரேசனை தடுத்து நிறுத்தி எங்களிடம் அழகான பெண்கள் இருக்கிறார்கள்.1000 ரூபாய் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி தேவி என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிவகாமி(40)என்ற பெண்ணும் ,ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பானு என்ற பெண்ணும் இருந்தனர். பின்பு கதிரேசன் என்னிடம் பணம் இல்லை நான் எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் பெயரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாக்கியத்தையும், அவரது கணவரையும் உடனடியாக கைது செய்தனர். அந்த வீட்டில் இருந்த சிவகாமி, பானு என்ற பெண்களை மீட்டு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாக்கியம் மற்றும் அவரது கணவர் பழனி சாமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.