உலகம் முழுவதும் சுமார் 300 கோடி பேர் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இது தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு சிறந்த செயலியாக இருப்பதால் கோடிக்கணக்கானோர் இதனை விரும்புகிறார்கள். இதன் காரணமாக whatsapp செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம்  அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்ற அப்டேட்களை வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் ஸ்டேட்டஸுக்கு லைக் செய்யும் வசதி, ஏஐ போன்ற பல்வேறு வசதிகள் whatsappபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கத்தில் ஒரு புதிய அப்டேட்டை மெட்டா வெளியிட்டுள்ளது.

அதாவது மோசடிகளை தடுக்கும் விதத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பேம் செய்தி, ஆட்டோமேட்டிக் அல்லது பல்க் செய்திகளை பகிர்வது whatsapp விதிப்படி குற்றம். இது ஒரு சட்டவிரோத குற்றம் என்பதால் இந்த செய்திகளை நீங்கள் மற்றவருக்கு அனுப்பினால் உடனடியாக உங்களுடைய whatsapp கணக்கு முடக்கப்படும். எனவே இது போன்ற செய்திகளை யாரும் மற்றவர்களுக்கு பகிரக்கூடாது. மேலும் உங்களுக்கும் யாராவது தவறான செய்திகளை அனுப்பினால் மிகுந்த எச்சரிக்கையுடன் அதனை கையாள்வது அவசியம். மேலும் நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அதிலிருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.