
இந்தியாவில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு 5 கிலோ இலவச தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பிக்க இருக்கிறது.
அதாவது அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதாக கண்டறியபேருள்ளது. எனவே இது தொடர்பாக சோதனை நடத்தி அவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட இருக்கிறது. இதேபோன்று இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் ரேஷன் கார்டுகளும் தகுதி நீக்கம் செய்யப்படும். மேலும் இதற்காக ஆவணங்களை சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.